கவுண்ட்டர் மகான்
தமிழ் சினிமாவின் லெஜண்ட் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. இவரது கவுண்ட்டர் நகைச்சுவை வசனங்கள் இப்போதும் மீம் டெம்பிளேட்டுகளாக உலா வருவது உண்டு. இந்த நிலையில் கவுண்டமணி “ஓத்த ஓட்டு முத்தையா” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஏ.என்.ராஜாகோபால் என்பவர் இயக்கியுள்ளார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சந்து பொந்தில் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி
‘இந்த நிலையில் “ஓத்த ஓட்டு முத்தையா” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கவுண்டமணி இத்திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு டெக்னீசியன்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தவர், “இந்த விழாவுக்கு வந்திருக்கும் ரசிகர்கள், வராத ரசிகர்கள், வீட்டிலே இருக்கும் ரசிகர்கள், வெளியூரிலே இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டிலே இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்” என நகைச்சுவையாக தனது பாணியில் நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இன்னும் இண்டு, பொந்து சந்து போன்றவற்றில் ரசிகர்கள் இருந்தால் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவரது பாணியில் கூறியபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.