எகிறும் எதிர்பார்ப்பு
அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித் நடிப்பில் இதற்கு முன் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் இவர்களுடன் அர்ஜூன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
பிரீமியர் காட்சி ரத்து?
அதாவது சில நாட்களுக்கு முன்பு “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு, அதாவது படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நாளுக்கு முந்தைய நாள், திரையிடப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. சென்னை மட்டுமல்லாது கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் இந்த பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த பிரீமியர் காட்சி ரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

படத்தில் இடம்பெறும் மாஸ் ஆன காட்சிகளை முதலிலேயே மொபைலில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் லீக் செய்துவிடுவார்கள் என்பதால் பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.