விடாமுயற்சியால் வந்த சிக்கல்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெளியீட்டால் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் என்ன?
“விடாமுயற்சி” திரைப்படம் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் இத்திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளதாம். இதனிடையே “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் “குட் பேட் அக்லி” திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் மே மாதம் வெளியாக உள்ளதாம்.
ஒரு திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்றால் இரண்டு மாதங்களாவது அதிக பார்வையாளர்கள் பார்த்தால்தான் 40% வருமானாவது பெற முடியும். அந்த வகையில் மே மாதம் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமானால் ஏப்ரலில் ஓடிடியில் வெளியாகும் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கான பார்வையாளர்கள் குறைந்துப்போக வாய்ப்புள்ளதாம். ஆதலால் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்குமாறு நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.