ஆவலோடு எதிர்பார்க்கும் படம்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே இத்திரைப்படம் கொடுத்துள்ளது. “விடாமுயற்சி திரைப்படம் போனால் என்ன, Waiting for Good Bad Ugly” என்று ரசிகர்கள் தற்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏப்ரல் வெளியீடு
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் “குட் பேட் அக்லி” படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிரடி முடிவு!

அதாவது தனுஷ் இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” திரைப்படமும் “குட் பேட் அக்லி” திரைப்படமும் ஒரே நாளில் மோதப்போகிறது. இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவர இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் “குட் பேட் அக்லி” படக்குழுவினர் ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு தமிழகத்தின் பல ஊர்களில் பிரீமியர் காட்சிகளை திரையிட முடிவு செய்துள்ளது உறுதியாகியுள்ளதாம். ஆதலால் தனுஷ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.