இந்த ஆண்டு டபுள் டமாக்கா!
மகிழ் திருமேனி இயக்கியுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படமும் வெளிவரவுள்ளது. இவ்வாறு இரண்டு அஜித்குமார் திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் குஷியாக உலா வருகின்றனர்.

முந்தைய நாளே வெளியாகும் அஜித் படம்!
இந்த நிலையில் தற்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தை குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள், அதாவது ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு இத்திரைப்படத்தின் பிரீமியர் காட்சியை திரையிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல நகரங்களில் பிரீமியர் காட்சி திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.