ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும்…
அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனின் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும் இதில் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
OG சம்பவம்…
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற OG சம்பவம் என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் காட்சிகள் இந்த பாடலில் அனிமேஷன் வடிவில் இடம்பெற்றுள்ளன. இப்பாடலை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார். இப்பாடல் இதோ…