மலையாளத்தில் கௌதம் மேனன்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் “டாமினிக் அண்டு தி லேடீஸ் பர்ஸ்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், ரஜினிகாந்தை குறித்து மனம் உடைந்துபோன ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

என்னைய பத்தி தப்பு தப்பா….

“ரஜினி சார்க்கு துருவ நட்சத்திரம் படத்தின் கதையை கூறினேன். அவர் நடிப்பதாக முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால் அன்று மாலையே அவர் அந்த திரைப்படத்தில் நடிக்க மறுப்பு சொல்லிவிட்டார். என்னை பற்றி யாராவது அவரிடம் சொல்லியிருக்கலாம். ‘அவர் கிளைமேக்ஸ் எழுதமாட்டாரு, சொல்ற பேச்ச கேட்க மாட்டாரு’ என யாராவது கூறியிருக்கலாம். அது யார் என்று எனக்கு தெரியும். ஆனால் யார் என்று நான் கூறமுடியாது” என தனக்கு நடந்த சம்பவத்தை குறித்து அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.