வெற்றி கூட்டணி
இயக்குனர் கௌதமன் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “காக்க காக்க”, “வாரணம் ஆயிரம்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இத்திரைப்படங்களை தொடர்ந்து இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இனி வரும் காலமாவது கௌதம் மேனன் சூர்யாவை வைத்து திரைப்படம் இயக்குவாரா? என்று ரசிகர்கள் பெரிதளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கௌதம் மேனன் சூர்யா குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா ஓகே சொல்லிருக்கனும், ஆனா?…..
கௌதம் வாசுதேவ் மேனன் விக்ரமை வைத்து இயக்கிய “துருவ நட்சத்திரம்” திரைப்படம் பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருக்கிறது. இந்த நிலையில் அப்பேட்டியில் பேசிய கௌதம் மேனன், “சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் யோசிக்காமல் நடித்திருக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். ஏனென்றால் அவரை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். ஆனால் துருவ நட்சத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த படத்தின் கதையை குறித்து நாங்கள் இருவரும் நிறைய டிஸ்கஷன் செய்திருக்கிறோம். நீங்கள் இந்த படத்தில் நடித்தால் வேற லெவலில் இந்த படத்தை இயக்குவேன் என்று கூட கூறினேன். ஆனால் அவர் நடிக்கவில்லை. அவர் என்னை நம்பியிருக்கலாம். நான் அவரிடம் Favor ஆக கூட கேட்கவில்லை. நம்புங்கள் என்றுதான் கூறினேன். எவ்வளவு தப்பா போகிடப்போகுது என கேட்டேன். ஆனால் அவர் நடிக்கவில்லை” என்று மிகவும் ஆதங்கத்தோடு பேசினார்.