இயக்குனராக கொஞ்சம் சரிவு…
காதல் திரைப்படங்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவராக திகழ்ந்து வந்த கௌதம் மேனன், ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆக்சன் திரைப்படங்களில் களமிறங்கினார். அதுமட்டுமல்லாது சொந்த தயாரிப்பில் பல திரைப்படங்களை தயாரித்து இயக்கியதால் அவருக்கு பல பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டன. இதன் விளைவாக அவரது சில திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போனது. குறிப்பாக அவர் இயக்கிய “துருவ நட்சத்திரம்” திரைப்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதன் காரணமாகவோ என்னவோ கௌதம் மேனன் சமீப காலமாக பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில், “Dominic and the Ladies’ Purse” என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அத்திரைப்படம் சரியாக போகவில்லை. ஆதலால் சமீப காலமாக ஒரு இயக்குனராக அவர் சற்று சரிவையும் கண்டு வருகிறார்.
இனி ரொம்ப பிசி…
இந்த நிலையில் கௌதம் மேனன் இனி வரிசையாக திரைப்படங்களை இயக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது விஷாலை வைத்து ஒரு திரைப்படத்தையும் கார்த்தியை வைத்து ஒரு திரைப்படத்தை அடுத்தடுத்து இயக்க உள்ளாராம்.

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ்-கௌதம் மேனன் கூட்டணி என்பது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய கூட்டணி ஆகும். இடையில் சில திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. அந்த வகையில் கௌதம் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தெரிய வருகிறது.