தவெகவின் முதல் பொதுக்குழு
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு இன்று நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் இவ்விழாவில் ஆதவ் அர்ஜூனா உட்பட கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்லாது செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய 2000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இப்பொதுக்குழுவில் வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவுப் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.

விருந்தின் உணவு பட்டியல்
காலையில் பொங்கல், சட்னி, சாம்பார், வடை, டீ ஆகியவை வழங்கப்பட்டன. அதே போல் மதிய உணவாக, மால் பூவா ஸ்வீட், வெஜ் சூப், ஊறுகாய், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, சப்பாத்தி+பன்னீர் பட்டர் மசாலா, வெஜ் மட்டன் பிரியாணி, சாதம், சைவ மீன் குழம்பு, சாம்பார், மிளகு ரசம், இறால் 65, அவியல், ஆனியன் மணிலா, பகோடா, உருளை பட்டானி வருவல், தயிர் வடை, அப்பளம், வெத்தலை பாயாசம், மோர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட உள்ளது.