கலவையான விமர்சனம்
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன. இன்று காலை மற்றும் மதியம் என இரண்டு காட்சிகளே முடிவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் “First Half சுமார், Screenplay சொதப்பல், ரொம்ப Slow ஆ போகுது படம்” என ஆங்காங்கே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தெறித்து ஓடிய இர்ஃபான்
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை பிரபல திரையரங்கம் ஒன்றில் “விடாமுயற்சி” திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த Food Blogger இர்ஃபானிடம் மைக்கை நீட்டினார் பிரபல யூட்யூப் சேன்னல் நிறுபர். அப்போது இர்ஃபான், “அஜித் சாரை பார்ப்பதற்கு எனக்கு பிடித்திருந்தது. மியூசிக் நன்றாக இருந்தது, ஒளிப்பதிவு நன்றாக இருந்தது?” என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து “படத்தில் முதல் பாதி நன்றாக இருக்கிறதா? இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறதா?” என நிருபர் கேட்டபோது, “இரண்டுமே நன்றாக ஜாலியாக இருந்தது” என இர்ஃபான் கூறினார். அதன் பிறகு நிருபர், “படத்தில் உங்களுக்கு என்ன பிடித்திருந்தது?” என கேட்க, அதற்கு இர்ஃபான், “எத்தனை வாட்டி இதையே கேட்பீங்க” என கூறிவிட்டு மைக் இருந்த இடத்தை விட்டு தொலைதூரமாக விறுவிறுவென நடந்தார்.