ஷங்கரின் முதல்வன்…
1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த “முதல்வன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தை ஷங்கரே தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜூனுக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். படம் முழுக்க இருவருக்கும் இடையே நடக்கும் தனி நபர் போரே இத்திரைப்படத்தின் கதையாகும். இத்திரைப்படத்தில் ஷங்கர் படங்களுக்குண்டான பிரம்மாண்டங்கள் நிறைந்திருந்தாலும் ரகுவரனுக்கும் அர்ஜூனுக்கும் இடையே பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் எதுவும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்காது.

ஷங்கர் கூறிய காரணம்
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஷங்கர், “முதல்வன் பட கிளைமேக்ஸ் காட்சியில் ஹெலிகாப்டர், டாடா சுமோ போன்ற பரபரப்பு சண்டைக் காட்சிகள் எதுவும் இருக்காது. வெறும் இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து ஒரு தீவிரமான உரையாடலாகவே அத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் அமைந்திருக்கும்.

இது போல் நிறைய விஷயங்களை உடைத்து காட்சிப்படுத்துவதில் எனக்கு விருப்பம் ஜாஸ்தி. அதனை முடிந்த வரை செய்து வருகிறேன்” என கூறியிருந்தார்.
கட்டம் கட்டிய ரசிகர்கள்…
ஷங்கரின் இப்பேட்டியில் Comment பகுதியில் படை எடுத்த ரசிகர்கள் பலரும், “நீங்க தயாரிச்ச படம் என்பதால்தான் சிம்ப்பிளா கிளைமேக்ஸ் வச்சிட்டீங்க” என ஷங்கரை விமர்சித்து வருகின்றனர். ஷங்கர் ஒரு பாடல் காட்சியினை கூட அதிகளவு பொருட்செலவில் எடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.