நடிகை அனுஷ்கா ஷெட்டி:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக அனைவரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை அனுஷ்கா செட்டி இவர் திரைப்பட நடிகையாக வருவதற்கு முன்னர் யோகா டீச்சர் ஆக பணியாற்றி வந்தார். அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக தமிழ் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார். இதனுடையே அனுஷ்கா மற்றும் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலமாக அனுஷ்கா செட்டி ரேஞ்சே உயரத்திற்கு கொண்டு சென்றது.
உடல் எடையால் பறிபோன படவாய்ப்பு:
அந்த திரைப்படத்தில் அனுஷ்கா செட்டி நடிப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. முன்னதாக இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக அனுஷ்கா செட்டி தனது உடல் எடையை அதிகரித்ததால் பாகுபலி திரைப்படத்திலேயே நடிக்க மிகவும் சிரமமாக இருந்தது.

கிராபிக்ஸ் மூலம் உடல் எடையை குறைத்து ஒல்லியாக காண்பித்தார்கள். ஆனால் அதன் பிறகு வெளிவந்த திரைப்படங்களில் அனுஷ்கா செட்டி உடல் தோற்றம் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் செட்டாகவில்லை. அவர் உடல் எடை குறைத்தே ஆகவேண்டும் என பல இயக்குனர்கள் சொல்லியும் அவரால் குறைக்க முடியாமல் போனது. இதனால் திரைப்படங்களில் நடிக்காமல் தவிர்த்து விட்டார் அனுஷ்கா ஷெட்டி.
பாகுபலிக்கு பின் ஆளே காணோம்:
ரூ. 1800 கோடி வசூல் ஈட்டிய பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதற்கு மிக முக்கிய காரணமாக மிக முக்கிய பங்களிப்பு அனுஷ்கா செட்டியும் கொடுத்திருந்தார். அப்படியிருந்த நடிகைக்கே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் கடும் அதிருப்தியில் இருந்தார்கள் ரசிகர்கள்.
இதனால் அனுஷ்கா செட்டி மீண்டும் திரைப்படங்களில் எப்போது நடிப்பார் எப்போது அவரது தரிசனத்தை காண முடியும் என ரசிகர்கள் இயங்கி கொண்டிருந்த சமயத்தில் தற்போது வெறித்தனமான ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

அனுஷ்காவின் தரிசனம்:
ஆம், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கொண்ட “காதி” எனும் திரைப்படத்தில் தான் அனுஷ்கா செட்டி கமிட்டாகி நடித்து வருகிறார். இது திரைப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதனால் இந்த திரைப்படத்தின் ரிலீசுக்காக அனுஷ்கா செட்டி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு காதி திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும் என பேசிக்கொள்கிறார்கள்.