தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் நடிகர் விஜய், தற்போது முழு நேர அரசியலில் குதிக்க உள்ளார். சமீபத்தில் வெளியான கோட் படம் நல்ல வசூலை குவித்து வருகிறது.
இதையடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம்தான் கடைசி படம் என அறிவித்துள்ளார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள விஜய், முதல் மாநாட்டை வரும் 27ஆம் தேதி விழுப்புரத்தில் நடத்த உள்ளார்.இந்த நிலையில் இயக்குநம், நடிகருமான ரவி மரியா ஒரு படம் கூட விஜய்யை வைத்து இயக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டுள்ளார்.
ஆசை ஆசையாய் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவி மரியா, தற்போது பல படங்களில் வில்லன்களாக, நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.முதல் படத்தை எடுக்கும் முன்பே குஷி படம் வெளியான போது விஜய்யிடம் சென்று கதை சொன்னதாகவும், அதை வைத்து கூடிய விரைவில் இயக்கலாம் என நினைத்திருந்தார்.
ஆனால் அதற்கான கால நேரம் அமையாமல் போனது. 2014ல் ஜில்லா படத்தில் விஜய்யுடன் ரவி மரியா இணைந்து நடித்த போது கூட, விஜய் தன்னிடத்தில் வந்து, கதை என்ன ஆனது, என கேட்டதாகவும், அதன் பின் வாய்ப்பு அமையாமல் போனது வருத்தம்தான்.
இனி அவரை வைத்து படம் இயக்க முடியாது என்பது என் சினிமா வாழ்க்கையில் பெரிய குறை என புலம்பி வருகிறார்.