சுமாரான வரவேற்பு
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்த “கேம் சேஞ்சர்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களே வெளிவந்த வண்ணம் உள்ளன. திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக இருந்தாலும் திரைக்கதையில் சற்று தொய்வு இருப்பதாகவே விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் ஆங்காங்கே பல லாஜிக் மீறல்கள் இருப்பதாகவும் இது ஷங்கர் திரைப்படம் போல இல்லாமல் ஒரு பக்கா தெலுங்கு திரைப்படம் போலவே இருப்பதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு சுமாரான வரவேற்பையே இதுவரை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

ஈ ஆடும் திரையரங்கம்….
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் “கேம் சேஞ்சர்” திரைப்படம் ஓடும் திரையரங்கு ஒன்றில் பார்வையாளர்கள் மிகவும் குறைவாக இருப்பது போன்றும் பல சீட்டுகள் காலியாக இருப்பது போலவும் அதனை ராம் சரண் கடைசி இருக்கையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போலவும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் இந்த வீடியோ “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வந்துள்ளது.
? #GameChanger pic.twitter.com/QxkQCO46i4
— Arun Vijay (@AVinthehousee) January 10, 2025