ஹாலிவுட்டிற்கு நிகரான பிரம்மாண்டம்
இந்திய சினிமாவையே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த வருடம் என்றால் அது 2010 ஆம் ஆண்டுதான். ஹாலிவுட்டையே சவாலுக்கு அழைக்கும் விதமாக மிகவும் பிரம்மாண்டமாக உருவான “எந்திரன்” திரைப்படம் அந்த ஆண்டுதான் வெளிவந்தது.

நவீன தொழில்நுட்பங்கள், பிரம்மாண்டமான கதையமைப்பு என “எந்திரன்” திரைப்படம் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு நீங்கா இடத்தை இப்போதும் பிடித்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
எந்திரனாக கமல்
“எந்திரன்” திரைப்படம் முதன் முதலில் உருவான போது அத்திரைப்படத்தில் கமல்ஹாசன் தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக பிரீத்தி ஸிந்தா ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் இருவருமே இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. எனினும் கமல்ஹாசனை வைத்து “எந்திரன்” திரைப்படத்திற்கான Photoshoot எடுக்கப்பட்டது. அதன் புகைப்படங்கள் 2010 ஆம் ஆண்டு பல இதழ்களில் வெளிவந்தது. அப்புகைப்படங்கள் இதோ…



