களேபரமான திரைப்படம்
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. பல காரணங்களால் இத்திரைப்படம் தாமதமாக வெளியானது. மேலும் இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது தனுஷிற்கும் கௌதம் மேனனுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அது என் படம் இல்லை…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் வாசுதேவ் மேனனிடம் நிருபர் பரத்வாஜ் ரங்கன், “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தை குறித்து ஒரு கேள்வி கேட்க, அதற்கு கௌதம் மேனன், “என்ன படம் பெயர் சொன்னீர்கள்? எனை நோக்கி பாயும் தோட்டாவா? இது நான் இயக்கிய படம் இல்லை. வேறு யாரோ இயக்கிய படம்” என கூறிவிட்டு சிரித்தார். கௌதம் மேனன் அவ்வாறு கூறியது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.