இளம் கதாநாயகன்
“லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் இளம் கதாநாயகனாக ரசிகர்களின் மனதில் புகுந்தவர் பிரதீப் ரங்கநாதன். “லவ் டூடே” திரைப்படத்தை நடித்து இயக்கிய அவர், அத்திரைப்படத்தின் மூலம் வெற்றி இயக்குனர் என்ற பெயரையும் பெற்றார். இந்த நிலையில் “லவ் டூடே” திரைப்படத்தை தொடர்ந்து “டிராகன்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் அனுபமா, கயாது லோகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வெளியானது டிரைலர்..
இந்த நிலையில் “டிராகன்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. ஒரு கல்லூரி மாணவனை சுற்றி நடக்கும் சம்பவங்களால் இத்திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாக டிரைலர் பார்க்கையில் தெரிய வருகிறது. இத்திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.