2K Kid-களின் நாயகன்
“லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் தற்கால தலைமுறையினரிடையே மிகப் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். “லவ் டூடே” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது “டிராகன்” என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இத்திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

வெளியீட்டிற்கு முன்பே லாபம்!
இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே லாபம் பார்த்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “டிராகன்” திரைப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.14 கோடிக்கு வாங்கியுள்ளதாம். அதே போல் இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ.6 கோடி ரூபாய்க்கும் ஆடியோ உரிமம் ரூ.6 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளதாம். ஆக மொத்தம் ரூ.26 கோடி இப்போதே லாபம் பார்த்துள்ளதாம் இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்.
