டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார்
மகேஷ் பாபு டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர். இவரது திரைப்படங்கள் தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் அதிக வரவேற்பை பெறும். அந்தளவுக்கு இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

மாபெரும் வெற்றி
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த “டிராகன்” திரைப்படம் இமாலய வெற்றியை பெற்றுள்ளது. வெளிவந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் ரூ.100 கோடி வசூல் பெற்றுள்ளது இத்திரைப்படம். இத்திரைப்படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த வெற்றி விழாவில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மகேஷ் பாபுவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

என்ன வேண்டுகோள்?
“ஓ மை கடவுளே வெளியானபோது அப்படத்தை பாராட்டி மகேஷ் பாபு ஒரே ஒரு டிவீட் போட்டார். உடனடியாக தெலுங்கு ரசிகர்கள் அப்படத்தை பார்த்து கொண்டாடினார்கள். அதே போல் டிராகன் படத்தையும் அவர் பார்க்க வேண்டும் என காத்துக்கொண்டிருக்கிறேன். நிச்சயமாக இப்படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்ன அஸ்வத் மாரிமுத்து வேண்டுகோள் வைத்துள்ளார்.