லவ் டூடே
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய “லவ் டூடே” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூல் ஆனது. ஒரு அறிமுக நாயகனின் திரைப்படம் ரூ.100 கோடி வசூலாவது சினிமாத் துறையினர் பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அந்த வகையில் சென்ற வாரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் “டிராகன்” திரைப்படம் வெளியானது.

இவ்வளவு கோடி கலெக்சனா?
இந்த நிலையில் “டிராகன்” திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ.50 கோடி வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.37 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.