நாக சைதன்யா திருமணம்:
தெலுங்கு சினிமாவில் நட்சத்திர வாரிசு குடும்பத்தை சேர்ந்தவர் ஆன நாகார்ஜானா குடும்பத்தில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கு வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது .

சமந்தாவை 8 ஆண்டுகள் காதலித்த பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அந்த திருமண வாழ்க்கை நான்கு வருடத்திலேயே விவாகரத்தில் சென்று முடிந்துவிட்டது.
அதன் பிறகு நடிகை சோபிதாவுடன் ரகசியமாக டேட்டிங் சென்று வந்த நாக சைதன்யா பெற்றோர்கள் சம்பந்தத்துடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். வருகிற டிசம்பர் 4-ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார் .
சிம்பிளாக நடத்த திட்டம்:
இந்த நிலையில் இவரது திருமணம் குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரது தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா…. சோபிதாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்தை தெலுங்கு முறைப்படி பாரம்பரிய முறையில் திருமணம் நடத்த விரும்பினார்கள் .

அதனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த திருமணத்தை வைத்துக்கொண்டோம். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கிட்டத்தட்ட 300.. 400 பேர்கள் அடங்கிய திருமணமாக இது நடைபெற இருக்கிறது.
என் திருமணத்தில் தலையிடாதே:
முன்னதாக நாக சைதன்யாவும் இந்த திருமணம் ஆடம்பரமாக நடத்துவது எனக்கு விருப்பமில்லை என கூறியதால் நாங்கள் மிகவும் ஓரளவுக்கு சிம்பிள் ஆகவே இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.இதனால் எனக்கு பணமும் மிச்சமானது.

மேலும் நாக சைதன்யா இது என்னுடைய திருமணம் இதில் அனைத்து பொறுப்புகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். என்னிடம் விட்டுவிடுங்கள் என அவர் என்னிடம் கேட்டுக் கொண்டதால் அனைத்து பொறுப்புகளையும் நான் அவரிடம் விட்டுவிட்டேன். இதனால் அவர்களுக்கான பொறுப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது என நாகார்ஜுனா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.