நடிகை ஜான்வி கபூர்:
மறைந்த நடிகையான ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இந்தியில் தடக் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதுதான் அவரது முதல் திரைப்படம் தொடர்ந்து ஹிந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் நடிக்கவும் அதிக ஆர்வத்தை செலுத்தி தெலுங்கில் என்ட்ரி கொடுத்திருந்தார் .

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து தேவாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ஜான்வி கபூர். அடுத்ததாக தமிழ் சினிமாவிலும் அவர் நடிக்க .இருக்கிறார் இந்த நிலை ஜான்வி கபூர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் செய்யாறு பாலு தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர் ஆனால் அவருடன் நடிக்க கூடாது என்று ஜான்வி கபூருக்கு அவரது தந்தை போனி கபூர் கண்டிஷன் போட்டாரா என்று எனக்கு தெரியவில்லை.
தனுஷ் கூட மட்டும் நடிக்காதே:
ஏனென்றால் தனுஷ் படத்தின் மூலமாக தனது மகள் தமிழில் அறிமுகமாவதை காட்டிலும் பெரிய ஹீரோக்களான விஜய் மற்றும் அஜித் போன்ற நட்சத்திர நடிகர்களின் படங்களில் அறிமுகமானால் அது அவருக்கு சிறந்த எதிர்காலமாக இருக்கும் என போனி கபூர் கருதினாரோ என்ன தெரியவில்லை.

அதனால் தான் அவர் தனுஷ் திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ் ஒருவேளை இப்படியாக கூட இருக்கும்… அதாவது, போனி கபூர் தனுஷ் ஒரு பிளேபாய் என தெரிந்து கொண்டு தன்னுடைய மகளை அவரது படத்தில் நடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியும் இருக்கலாம் என கூறி வருகிறார்கள்.