சத்யராஜ் மகள்:
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் வில்லன் வேடங்களிலும் ஹீரோ கதாபாத்திரங்களிலும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

இவரது மகன் திரைத்துறையில் ஹீரோவாக இருந்து வருகிறார். சிபிராஜ் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது மகள் திவ்யா சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் ஆகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோமாவில் சத்யராஜ் மனைவி:
மகிழ்மதி என்ற இயக்கத்தின் மூலம் கடந்த நான்கு வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். இதற்கிடையில் தான் அவரது அம்மா அதாவது சத்யராஜின் மனைவி கடந்த நான்கு ஆண்டுகளாக கோவமாவில் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார்கள் .

இந்த நிலையில் திவ்யா சத்யராஜ் ஒரு உருக்கமான பதிவை போட்டு அனைவரது ஆறுதல்களையும் பெற்று வருகிறார். அந்த பதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்து சில ஆண்டுகளாக அம்மாவின் உடல்நிலை காரணமாக வாழ்க்கை சவாலாக மாறியது.
மோசமான கட்டத்தை கடக்கிறேன்…
வீட்டிலேயே ஐசியூ வைத்து நோயாளி கவனிப்பது மிகவும் கடினமானது. ஆனால் எனது பெற்றோரை பாதுகாக்க எது வேண்டுமானாலும் நான் செய்வேன். நானும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வேதனையான கட்டத்தை கடந்து வந்திருக்கிறேன் ஊட்டச்சத்து நிபுணராக எனது வெற்றி வாழ்க்கை முன்னேற வைத்திருக்கிறது என திவ்யா சத்யராஜ் பதிவிட்டுள்ளார்.

இதை அடுத்து தொடர்ந்து அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் அவரது அம்மா விரைவில் குணமாக பலரும் வேண்டி வருகிறார்கள். மிகச் சிறந்த மனிதர் சத்யராஜ் அவருக்கு வாழ்க்கையில் இத்தனை சோகங்கள் வந்திருக்கக் கூடாது. கடவுள் அவரை எப்படியாவது இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.