நடிகர் அஜித்:
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித் தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் திரைத்துறையில் வந்து தொடர்ந்து தனது முயற்சியாலும் தன்னுடைய அயராது உழைப்பாலும் இன்று அசைக்க முடியாத இடத்தை தல வைத்துக் கொண்டிருக்கிறார் .
தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட வெளியாகவுள்ளது. இதற்கிடையில் அஜித் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் தன்னுடைய ஈடுபாட்டை செலுத்தி வருகிறார். இப்படியான சமயத்தில் அஜித் குறித்த எந்த தகவல் வெளியானாலும் அது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படும். அந்த வகையில் தற்போது அஜித்தால் வாழ்க்கை பெற்ற பிரபல இயக்குனர் ஒருவர் பின்னர் அஜித்தையே உதாசீனப்படுத்திவிட்டு இப்போது அதை நினைத்து நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் சம்பவம் தான் நிகழ்ந்திருக்கிறது .
பில்லா 2:
அதாவது அஜித் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பில்லா. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான விஷ்ணுவர்தன் தான் இயக்கினார். இந்த திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய பிரபலமான இயக்குனராக விஷ்ணுவர்தன் பார்க்கப்பட்டார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தையும் பெயரையும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது .
அதன் பிறகு பில்லா படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து பில்லா 3 திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு விஷ்ணுவர்தனுக்கு கிடைத்ததாம். ஆனால், விஷ்ணுவர்தனோ அந்த சமயத்தில் சல்மான் கான் படத்தை இயக்குவதற்கான ஒரு வாய்ப்பு வந்ததும் அஜித் படத்தை எடுக்க வேண்டாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று நினைத்து நினைத்து உதாசீனப்படுத்தி இருக்கிறார் .
சைலண்டா சம்பவம் செய்த தல!
இதனால் அந்த படம் அப்படியே டிராப் அவுட் ஆக்கிவிட்டது. மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசையா இருக்கும் விஷ்ணுவர்த்தனுக்கு அந்த வாய்ப்பை அமையவேயில்லை. அஜித் தன்னை சுதாசீனப்படுத்தி இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு சைலன்டாக சம்பவம் செய்திருக்கிறார். இது அவருக்கு பெரிய பாடமாகவும் அமைந்திருக்கிறது. ஒருவேளை அஜித் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் பில்லா 3 திரைப்படம் உருவாகலாம். நிச்சயம் அஜித் மன்னித்து வாய்ப்பு கொடுப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.