புதிய சர்ச்சையில் மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் சினிமா மேடைகளில் பேசும்போது சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் “பாட்டல் ராதா” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மிஷ்கின் பல கெட்ட வார்த்தைகளை இடையே இடையே பயன்படுத்தி பேசினார். இது தற்போது அவர் மீது பல விமர்சனங்களை உண்டாக்கி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் கேவலமாக ஆடும் பெண்…
இயக்குனர் மிஷ்கின் “பாட்டல் ராதா” திரைப்படம் விழாவில் பேசும்போது, “இன்ஸ்டாகிராமில் எல்லா பெண்களும் டான்ஸ் ஆடுகிறார்கள். பின்பு உதட்டை கடிக்கிறார்கள். என் மகள் போன்ற ஒரு பெண், அழகு லட்சணமாக இருக்கிறாள். அவள் ஒரு கேவலமான பாடலுக்கு ரீல்ஸ் போடுகிறாள். உதட்டை கடித்துக்கொண்டு ரியாக்சன் கொடுக்கிறாள். ஆ ஊ என்று பேசுகிறாள். நண்பர்களே, இதை விட மோசமான Addiction இந்த சமூகத்திற்கு இருக்கிறதா?” என்று ஆதங்கப்பட்டார்.
அந்த பாட்டு வைக்கும்போது உங்களுக்கு தெரியலையா?
இந்த நிலையில் “மேற்கு தொடர்ச்சி மலை” திரைப்படத்தின் இயக்குனரான லெனின் பாரதி, தனது “X” தளத்தில் மிஷ்கினின் பேச்சை விமர்சித்து ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார். “மஞ்சள் புடவை கட்டி வாழ மீனுக்கும் என்று விரச நடனமாட வைத்து பெண்களை போகத்திற்கான பொருள் என்று காட்டும்போதெல்லாம் அவர்கள் உங்கள் மகள் போன்றவள் என்றெல்லாம் தோன்றாது. ஊருக்கு உபதேசம் செய்யும் முன் சுயவிமர்சனம் செய்துகொண்டு பேசுங்கள்” என்று மிஷ்கினை விமர்சித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கிய “சித்திரம் பேசுதடி”, “அஞ்சாதே”, “யுத்தம் செய்” போன்ற திரைப்படங்களில் மஞ்சள் புடவை அணிந்தபடி ஒரு பெண் நடனமாடும் பாடல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் புடவை கட்டி வாழை மீனுக்கும்… என்று விரச நடனமாட வைத்து பெண்களை போகத்திற்கான பொருள் என்று காட்டும் போதெல்லாம் அவர்கள் உங்கள் மகள் போன்றவள் என்றெல்லாம் தோணாது.. ஊருக்கு உபதேசம் செய்யும்முன் சுயவிமர்சனம் செய்து கொண்டு பேசுங்கள் #மிஷ்கின் அவர்களே.. #mysskin #Bottle_Radha https://t.co/2Ngt8J4p1B
— leninbharathi (@leninbharathi1) January 19, 2025