வணங்கான்
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ள திரைப்படம் “வணங்கான்”. இத்திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் இத்திரைப்படம் சம்பந்தமான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் பாலா.

7 வயசுலயே….
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் பாலா கலந்துகொண்டபொழுது நிருபர், “முதன்முதலில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என கேட்டார். அதற்கு பதிலளித்த பாலா, “இரண்டாம் வகுப்பு படித்தபோது பீடி குடித்தேன். அதன் பின் பத்தாம் வகுப்பில் இருந்து இப்போது வரை பிடித்துக்கொண்டிருக்கிறேன்” என கூற, “எப்போதாவது தாய் தந்தையரிடம் மாட்டியிருக்கிறார்களா?” என நிருபர் கேட்டார்.

அதற்கு பாலா, “ஒரு முறை பருத்திக்காட்டில் சிக்ரெட் பிடித்துக்கொண்டிருந்தபோது பத்த வைக்க தெரியாமல் பத்தவைத்து கொஞ்சம் பருத்தி எரிந்துவிட்டது. அதில் மாட்டிக்கொண்டேன்” என கூறினார்.