பாலாவின் குரு
“சேது” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு தனித்துவ படைப்பு கொடுத்த இயக்குனர் பாலா, தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. விக்ரம், சூர்யா ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்த இயக்குனர் பாலா. இவர் இயக்குனராவதற்கு முன்பு இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்த சமயத்தில் நடந்த ஒரு செய்தியை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் பாலா.

வன்மம்
“இயக்குனர் பாலு மகேந்திரா ஒரு தெலுங்கு படத்தை இயக்கினார். அந்த படத்தில் மற்ற இயக்குனர்கள் அனைவரும் வேலையை உதறிவிட்டு போய்விட்டார்கள். நான் மட்டும் ஒற்றை ஆளாக எல்லா வேலையிலும் ஈடுபட்டு அந்த படத்தை முடித்தோம். நான் இவ்வாறு செய்ய காரணம் அவர் மீது எனக்கிருந்த வன்மம்தான். அவரிடம் நான் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் என்னை மற்றவர்களின் முன் உதாசீனப்படுத்தி பேசிவிட்டார்.

வேறு மாதிரி பின்னணியில் வளர்ந்த எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. ஒரு நாள் அவர் என்னை நம்பி இருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொண்டேன்” என இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.