கோலிவுட் டூ பாலிவுட்
கோலிவுட்டில் “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற பெயரை பெற்றவர். அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற மாபெரும் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இத்திரைப்படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.

மாஸ் ஹிட்
நடிகர் ஷாருக்கானிற்கு கடந்த 10 வருடங்களாகவே அவர் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக எடுபடவில்லை. இந்த சமயத்தில்தான் அட்லீ ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் நீண்ட காலங்கள் கழித்து ஷாருக்கானுக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
பதிலடி கொடுத்த அட்லீ
“ஜவான்” திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் அட்லீ “பேபி ஜான்” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் அவர் தமிழில் இயக்கிய “தெறி” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புரொமோஷனுக்காக ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அட்லீயிடம் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “நீங்கள் எதாவது நடிகர் அல்லது தயாரிப்பாளரை சந்திக்கும்போது உங்களை பார்த்து அட்லியா? யார்? என கேட்டிருக்கிறார்களா?” என்று அவரது நிறத்தை வைத்து கேலி செய்தார்.

இதனை புரிந்துகொண்ட அட்லீ, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. நான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்தான் என்னுடைய முதல் படத்தின் தயாரிப்பாளர். அவர் என்னிடம் Script மட்டுந்தான் கேட்டாரே தவிர அவர் நான் எப்படி இருக்கிறேன் என்றெல்லாம் பார்க்கவில்லை. உருவத்தை வைத்து நாம் எப்போதும் எடை போடக்கூடாது. மனதை வைத்துதான் தீர்மானிக்க வேண்டும்” என்று பதிலளித்தார். அட்லீ கொடுத்த இந்த பதிலடி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.