சீயானின் அதிரடி திரைப்படம்
சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “வீர தீர சூரன்” பார்ட் 2. இத்திரைப்படத்தை எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ளார். துசாரா விஜயன் இதில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலரை பார்க்கையில் இத்திரைப்படம் ஒரு அட்டகாசமான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மீண்டும் இடம்பெறும் மாஸ் ஆன பாடல்
விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் “தூள்”. இத்திரைப்படத்தில் வித்யாசாகரின் இசையைல் இடம்பெற்ற “சிங்கம் போல” என்ற பாடலை “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் பயன்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு ஒரு அட்டகாசமான தகவல் வெளிவந்துள்ளது.
