விஜய் டிவி பிரபலம்
2017-2019 ஆம் ஆண்டுவரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா. 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அவளும் நானும்” தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், “செந்தூரப்பூவே” தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி-சீசன் 2” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷா குப்தா, வெள்ளித்திரையில் “ருத்ர தாண்டவம்”, “ஓ மை கோஸ்ட்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் “பிக் பாஸ் தமிழ் -சீசன் 8” நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு 21 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.
கிறுஸ்துமஸ் ஃபோட்டோஷூட்
இந்த நிலையில் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி தழும்ப தழும்ப கிறுஸ்துமஸ் உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது மட்டுமல்லாமல் இணையத்தில் காட்டுத் தீ போல் வலம் வருகிறது.



