இயக்குனர் அவதாரம்…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், சமீப காலமாக பல திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த “பவர் பாண்டி” திரைப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு “ராயன்” திரைப்படத்தில் நடித்து அதனை இயக்கினார். “ராயன்” திரைப்படத்தை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, “இட்லி கடை” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் “இட்லி கடை” திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

அடுத்த டார்கெட் அஜித்…
அஜித்குமார் தற்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவருகிறது. அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். ஆதலால் அக்டோபர் மாதத்திற்குப் பிறகே திரையுலகிற்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ், அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். அஜித் தனது கார் பந்தயங்களை முடித்துவிட்டு மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய பின் இத்திரைப்படத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறுகின்றனர். அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படமும் தனுஷின் “இட்லி கடை” திரைப்படமும் ஒரே நாளில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.