தொடரி திரைப்படம்:
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தொடரி. இந்த திரைப்படத்தை பிரபு சாலமோன் இயக்கி இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இவர்களுடன் நான் பூஜா சாவேரி , கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன் , தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கடையில் வெளிவந்த இந்த திரைப்படம் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.
தனுஷ் கொடுத்த டார்ச்சர்:
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்தபோது நடிகை கீர்த்தி சுரேஷை தனுஷ் மிகவும் டார்ச்சர் செய்ததாக செய்தி ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் தற்போது விழி பிதுங்க வைத்திருக்கிறது .

அதாவது இது குறித்து பிரபல விமர்சகர் அந்தகன் youtube சேனலில் கூறியிருப்பதாவது.. தொடரி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தனுஷ் டார்ச்சர் கொடுத்தாராம். அதாவது தொடரி திரைப்படத்தில் ஏதோ ஒரு விஷயத்தை நடிகர் தனுஷ் கீர்த்தி சுரேஷிடம் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார்.
அதற்கு கீர்த்தி சுரேஷ் திட்டவட்டமாக முடியாது என தெரிவித்ததால் தொடர்ந்து அவரை டார்ச்சர் செய்து வந்திருக்கிறார் தனுஷ். அந்த திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் ரயில் மேல்தான் படப்பிடிப்பு எடுத்திருப்பார்கள். அப்போது கீர்த்தி சுரேஷை சரியாக நடிக்க விடாமல் நடிகர் தனுஷ் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.
தாங்க முடியாமல் அழுத கீர்த்தி சுரேஷ்:
இதனால் ஒரு நாளைக்கு ஒரு காட்சி எடுப்பதற்கு பல டேக்குகள் வாங்கி கீர்த்தி சுரேஷ் நடித்தாராம். அப்படித்தான் மூன்று நாள் வரை சரியாக படபிடிப்பு நடைபெறாமல் இருந்ததாம். ஒரு கட்டத்தில் தனுஷின் டார்ச்சர் தாங்க முடியாமல் அழுது கொண்டே கீர்த்தி சுரேஷ் அவரது தந்தை சுரேஷுக்கு போன் செய்திருக்கிறார் .

உடனே விஷயத்தை கேட்டு சுரேஷ் நடிகர் ரஜினிகாந்தின் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் ரஜினிகாந்த்துக்கு போன் செய்து விஷயத்தை எல்லாவற்றையும் சொல்ல அதன் பிறகு தனுஷிற்கு அந்த விஷயம் சென்று இருக்கிறது.
அதன் பிறகு தான் அந்த திரைப்படம் எடுத்து முடித்து ஒரு வழியாக வெளிவந்தது. தொடரி திரைப்படத்தை பிரபு சாலமன் நினைத்தது போல் எடுக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். அதனால் தான் அந்த திரைப்படம் பிளாப் ஆனது என்று கூட அவர் தெரிவித்திருக்கிறார்.