வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு அதிக அளவில் வரவேற்பு இருப்பது கண்கூடு. “பொல்லாதவன்”, “ஆடுகளம்”, “வட சென்னை”, “அசுரன்” போன்ற திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இதனை தொடர்ந்து “விடுதலை” திரைப்படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.

தனுஷின் அசரவைக்கும் Line Up
ஆனால் வெற்றிமாறனுடன் இணைவதற்கு முன்பு கிட்டத்தட்ட 4 திரைப்படங்களில் தனுஷ் நடிக்க உள்ளாராம். தற்போது தனுஷ் “இட்லி கடை” திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த ஹிந்தி திரைப்படத்தை தொடர்ந்து “போர் தொழில்” இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் தனுஷ் இணையவுள்ளார்.

அதனை தொடர்ந்து “அமரன்” இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். ராஜ்குமார் பெரியசாமி திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த 4 திரைப்படங்களுக்குப் பிறகுதான் வெற்றிமாறனின் திரைப்படத்தில் தனுஷ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
தொடங்கியது வாடிவாசல்

தனுஷ் இந்த 4 திரைப்படங்களில் நடிக்கப்போகும் இந்த இடைவெளியில் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து இயக்க உள்ள “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் பின் தனுஷுடன் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.