உலக நடிகர் தனுஷ்
தனுஷ் தமிழ் சினிமா மட்டுமன்றி பாலிவுட், ஹாலிவுட் என உலகம் முழுவதிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். தற்போது “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, “இட்லி கடை” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள தனுஷ், அடுத்ததாக “லப்பர் பந்து” இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, “போர் தொழில்” இயக்குனர் விக்னேஷ் ராஜா ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கிடையே ஒரு ஹிந்தி திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

புதிய பாலிவுட் படத்தின் புரோமோ
இந்த நிலையில் தனுஷ் நடிக்க உள்ள புதிய பாலிவுட் திரைப்படத்தின் வெறித்தனமான புரொமோ வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு “தேரே இஷ்க் மே” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதில் தனுஷிற்கு ஜோடியாக கிரீத்தி சனான் நடிக்க உள்ளார்.
அம்பிகாபதி யுனிவர்ஸ்

2013 ஆம் ஆண்டு பாலிவுட்டில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் “ராஞ்சனா”. இத்திரைப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் “தேரே இஷ்க் மே” திரைப்படத்தின் புரொமோ வீடியோவில் “From the World of Raanjhanaa” என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்து இத்திரைப்படம் “Raanjhanaa Universe” ஆக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.