இசைஞானி
தமிழ் சினிமா இசை உலகை 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி ஆண்டுகொண்டிருக்கும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் இளையராஜாவின் வேடத்தை ஏற்று நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தின் துவக்க விழா கூட சமீபத்தில் நடந்து முடிந்தது. “ராக்கி”,”சாணி காயிதம்”, “கேப்டன் மில்லர்” போன்ற திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

திடீரென வெளியான அதிர்ச்சி செய்தி
இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தனுஷ் கேட்கும் சம்பளத் தொகையை தயாரிப்பு நிறுவனத்தால் தர இயலாத நிலை ஏற்பட்டுவிட்டதாம். ஆதலால் இத்திரைப்படம் டிராப் ஆகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.