பேன் உலக நடிகர்
இந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் பேன் இந்திய நடிகராக மட்டுமல்லாது பேன் உலக நடிகராகவும் வலம் வருகிறார். “தி எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்”, “தி கிரே மேன்” போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் தனுஷ் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, “இட்லி கடை” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு ஹிந்தி திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். அந்த ஹிந்தி திரைப்படத்தை அடுத்து “போர் தொழில்” இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் தனுஷ் இணையவுள்ளார்.
அதன் பின் “அமரன்” இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனுஷ் இணையவுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படங்களை தொடர்ந்து வெற்றிமாறனுடன் ஒரு புதிய திரைப்படத்தில் இணையவுள்ளார். இவ்வாறு தனுஷின் லைன் அப்-ல் பல படங்கள் இருக்கின்றன.
விஜயகாந்த் பட டைட்டில்
இந்த நிலையில் தனுஷ் “லக்கி பாஸ்கர்” இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்க்கவுள்ளாராம். இத்திரைப்படத்திற்கு ஹானஸ்ட் ராஜ் என்று பெயர் வைத்துள்ளனராம்.

விஜயகாந்த் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “ஹானஸ்ட் ராஜ்”. இந்த நிலையில் தனுஷ் “ஹான்ஸ்ட் ராஜ்” என்ற டைட்டிலில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.