இயக்குனராக களமிறங்கிய தனுஷ்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், “ராயன்” திரைப்படத்தை இயக்கி நடித்ததை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பிரியா வாரியர், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து “இட்லி கடை” என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி வருகிறார்.

“இட்லி கடை” திரைப்படத்தை தொடர்ந்து “போர் தொழில்” இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். மேலும் “லப்பர் பந்து” இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
எகிறிய பட்ஜெட்
இதில் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள திரைப்படத்தை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.145 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் “இட்லி கடை” திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.104 கோடி என்று கூறப்பட்ட நிலையில் தனுஷின் அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடி உயர்ந்துள்ளது சினிமா தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.