இளையராஜாவாக தனுஷ்…
தமிழ் சினிமாவின் இசை உலகை மூன்று தலைமுறைகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கப் போகிறார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க கனெக்ட் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனமும் தனுஷின் உண்டர்பார் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது.

வெளியேறிய தனுஷ்..
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து தனுஷின் உண்டர்பார் நிறுவனம் வெளியேறியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தனுஷிற்கு பதிலாக இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் கனெக்ட் மீடியாவுடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். எனினும் தனுஷே இத்திரைப்படத்தில் இளையராஜாவாக நடிக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லையாம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் 6 மாதங்கள் பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது.