தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றாலே அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைவதோடு கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்க்கும் படமாகவும் அமையும்.
இதனால் தனுஷ் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். அவரது திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமானதாகவும் நடிப்பு அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும் .
அதுதான் தனுஷ் திரைப்படங்களில் ஸ்பெஷல் என்று சொல்லலாம். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தை பார்த்து நடிகர் தனுஷ் மெர்சல் ஆகிப் போய்விட்டாராம்.
இதனால் அந்த படத்தின் இயக்குனருடன் எப்படியாவது கைகோர்த்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தனுஷ் முனைப்புடன் இருந்ததாகவும். அதனால் தாமாகவே சென்று ராஜ்குமார் பெரியசாமியிடம் வாய்ப்பு கேட்டதாகவும் ஒரு செய்தி அரசியல் புரசலாக உலா வந்து கொண்டிருக்கிறது .
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அது உறுதி செய்யும் வகையில் நம்பும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது .
ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.ஏற்கனவே தனுஷ் மற்றும் சிவகார்திகேயனிடையே மிகப்பெரிய சண்டை இருப்பதாகவும் தனுஷ் தான் வளர்த்து விட்டவன் தான் சிவகார்த்திகேயன் என்று பல மேடைகளில் கூறி தன்னை அசிங்கப்படுத்தியதாகவும் சிவகார்த்திகேயன் அதை வெறுப்பதாகவும் எல்லாம் செய்திகள் வெளியானது .
இப்படி இருக்கும் சமயத்தில் சிவகார்த்திகேயன் வெற்றியை பார்த்து நடுங்கிய தனுஷ் அமரன் இயக்குனர் உடன் கைகோர்த்து அடுத்த படத்திலே கமிட் ஆகி நடிக்கப்போவது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.