நடிகர் தனுஷ்:
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷ் தனது அண்ணன் மற்றும் அப்பா கஸ்தூரிராஜாவின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை தன்னுடைய திறமையின் மூலமாக உருவாக்கி வைத்திருக்கிறார்.

தனுஷ் இன்று வரை யாராலும் அசைக்க முடியாத ஹீரோவாக நம்பர் 1 இடத்தை தற்போது தக்க வைத்துக்கொண்டார். தொடர்ந்து அடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் அவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
நயன்தாரா குற்றசாட்டு:
இதனிடையே தனுஷ் அவரது வளர்ச்சிக்கு ஈடாக பெரும் சர்ச்சைகளில் சிக்கும் நபராக பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக நடிகைகளுடன் கிசுகிசுக்கள் மற்றும் எந்த ஒரு பிரபலங்களின் விவாகரத்து அரங்கேறினாலும் அதற்கு மிக முக்கிய காரணம் தனுஷ் தான் என்று செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தான் நடிகை நயன்தாரா கூட தனுஷ் மீது பகிரங்கமான மூன்று பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதாவது என்னுடைய திருமண வீடியோவை வெளியிடுவதற்கு நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து பயன்படுத்திய ஒரு கிளிப்புக்காக ரூ. 10 கோடி தனுஷ் கேட்பதாக கூறி நயன்தாரா குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார் .
தனுஷின் உண்மை முகம்:
இப்படியாக தனுஷ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நபராக பார்க்கப்பட்டு வரும் சமயத்தில் பிரபலம் ஒருவர் தனுஷை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதாவது திரைப்படங்களில் பார்க்கும் தனுஷ் வேறு கேமரா முன்னாடி வந்து மேடைகளில் பேசும் தனுஷ் வேறு.

ஆனால் அவருடன் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அவரது உண்மையான நிஜமுகம். அவர் கேமரா முன் வேறு மாதிரி இருப்பார். நிஜத்தில் வேற மாதிரி இருப்பார். கிட்டத்தட்ட நிஜத்தில் ஒரு வில்லன் என்று சொல்லலாம். அப்படித்தான் அவரது குணமும் இருக்கும் என அவர் பேசியிருப்பது தற்போது மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.