தனுஷின் சிபாரிசுகள்:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த வரும் நடிகர் தனுஷின் சிபாரிஸில் திரைத்துறைக்கு வந்து இன்று நட்சத்திர பிரபலங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் .

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இசையமைப்பாளர் அனிருத் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தனுஷின் சிபாரிசில் தான் சினிமாவிற்கு நுழைந்து தனது திறமையின் மூலமாக தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
அனிருத் அறிமுகம்:
அந்த வகையில் அனிருத்தை முதன்முதலில் இசை அமைக்க திரைத்துறைக்கு அழைத்து வந்தவர் தனுஷ் தான். 3 திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் முதல் படத்திலிருந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து அடுத்த அடுத்த வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்து இன்று நட்சத்திர இசையமைப்பாளர் என்ற அந்தஸ்திலிருந்து வருகிறார். இப்படியான நேரத்தில் அனிருத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமே, ஐஸ்வர்யா தனுஷ் தான் என பலரும் கூறி வந்தார்கள்.
அதாவது ஐஸ்வர்யாவின் உறவுக்கார பையன் தான் அனிருத் என்றும் அவரின் இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அனிருத் ஐஸ்வர்யாவால் தான் இன்று உச்சத்தில் இருக்கிறார் என்றெல்லாம் பலரும் கூறி வந்தார்கள். ஆனால் அதை சமீபத்திய பேட்டி ஒன்றில் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
தனுஷ் தான் எல்லாத்துக்கும் காரணம்:
அப்பா அம்மாகிட்ட அவனுக்கு நிறைய திறமை இருக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கிறதவிட அவன சினிமாவில நான் பெரிய அந்தஸ்தில் கொண்டு வருவேன். அந்த அளவுக்கு அவனிடம் திறமை இருக்கு என்று அவங்களோட பெற்றோருக்கு நம்பிக்கை ஊட்டினது மட்டுமில்லாமல் அனிருத்துக்கு கீபோர்ட் வாங்கி கொடுத்து இசையமைக்க உட்கார வைத்தது வரை தனுஷ் தான்.

எனவே எல்லா புகழும் தனுஷிற்கு தான் சேரும். இருந்தாலும் அனிருத் திரைத்துறைக்கு வந்த பிறகு தன்னுடைய திறமையால் உச்சத்தை அடைந்திருக்கிறார் . அது வேறு விஷயமாக இருந்தாலும் எனக்கும் அனிருத்தின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அதற்கு முழு காரணம் தனுஷ் தான் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதை பேட்டியில் ஒப்பு கொண்டிருக்கிறார்.