Tuesday , 19 November 2024
Home Cinema News அன்று சிவகார்த்திகேயன்… இன்று நயன்தாரா – பிரபலங்களின் வளர்ச்சியை தடுக்கும் தனுஷ்!
Cinema News

அன்று சிவகார்த்திகேயன்… இன்று நயன்தாரா – பிரபலங்களின் வளர்ச்சியை தடுக்கும் தனுஷ்!

sivakarthikeyan

9 வருட பழிவாங்கல்:

நடிகர் தனுஷ் தொடர்ந்து 9 வருடங்களாக தன்னை பழிவாங்கி வருவதாகவும் கடந்த இரண்டு வருடங்களாக தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் நடிகை நயன்தாரா பகிரங்கமாக தனது சமூக வலைதள பக்கத்தில் மூன்று பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த விஷயம் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையே அதிர வைத்திருக்கிறது. இதனால் தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் என்ன பிரச்சனை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதாவது திருமண வீடியோ வெளியிடுவதில் நடிகர் தனுஷ் மறைமுகமாக இருந்து கொண்டு அதை வெளியிடக்கூடாது என்பது வகையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் அதனால் எங்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் நானும் என்னுடைய கணவர் விக்னேஷ்வனும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.


காதலிக்கிறேன்னு சொன்னதும் கடுப்பான தனுஷ்:

அதாவது இந்த விஷயத்திற்கு காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்து பார்த்தபோது கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு முன்பு நானும் ரவுடிதான் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை முதலில் தயாரிக்க ஒப்புக்கொண்டது தனுஷ் தான்.

nayanthara

படம் ஆரம்பித்து தனுஷ் படத்தை தயாரித்து வந்த நேரத்தில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கும் விஷயம் தெரிய வந்ததை அடுத்து இந்த திரைப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை நடிகர் தனுஷ் கைவிட்டு விட்டாராம் . இதை அடுத்து படத்தை எப்படி வெளியிடுவது என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் கிடந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் To நயன்தாரா:

பின்னர் நயன்தாராவிடம் இருந்த கை காசு மொத்தத்தையும் போட்டு அந்த படத்தை வெளியிட்டு வெற்றி பெறச் செய்தார்கள். இதனால் தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் தனுஷ் தொழில் ரீதியாக பெரும் தொல்லையாக இருந்து வருவதாக கிட்டத்தட்ட 9 வருடங்களாக இந்த பகை நீடிப்பதாக நடிகை நயன்தாரா தற்போது அறிவித்து அதிரவைத் திறக்கிறார் .

nayanthara

இதே போல்தான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை சினிமாவில் வளர வைத்ததே நடிகர் தனுஷ் தான் அப்படி இருக்கும்போது திடீரென அவரது வளர்ச்சி பார்த்து சகித்துக் கொள்ள முடியாமல் தனுஷ் அவரது திரைப்படங்களை வெளியிடுவது பெரும் சிக்கல் மற்றும் குடைச்சல் கொடுத்து வந்தார்.

அதை சிவகார்த்திகேயனே பொதுவெளியில் பகிரங்கமாக போட்டு உடைத்தார். அடுத்ததாக அதே பாணியில் நடிகை நயன்தாராவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் தனுஷ். இதனை தெரிந்து கொண்ட ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று கூடி நயன்தாராவுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இதனால் தனுஷின் முகம் தொடர்ந்து அடுத்தடுத்து கிழித்தெறியப்படுத்துகிறது.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...