வெற்றி கூட்டணி
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்குள் ஒரு பிரளயத்தை கிளப்பிவிட்டு போவது வழக்கம். “பொல்லாதவன்”, “ஆடுகளம்”, “வட சென்னை”, “அசுரன்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் “வட சென்னை பார்ட் 2” திரைப்படத்திற்காக தமிழ்நாடே காத்துக்கொண்டிருக்கிறது.

“வட சென்னை பார்ட் 2” திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இது குறித்த எந்த ஒரு தெளிவான செய்தியும் இதுவரை வெற்றிமாறனிடம் இருந்தோ அல்லது தனுஷிடமிருந்தோ வெளிவரவில்லை.
மீண்டும் கூட்டணி
இந்த நிலையில் “விடுதலை” திரைப்படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தனது “X” தளத்தில் “விடுதலை பார்ட் 2” திரைப்படத்தின் வெற்றிக்கு உதவிய ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் தயாரிக்கபோகும் இரண்டு திரைப்படங்களை குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளது.

அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அதே போல் நடிகர் சூரியை வைத்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி என்றால் ஒருவேளை “வட சென்னை பார்ட் 2” ஆக இருக்குமோ என ரசிகர்கள் அனுமானித்து வருகின்றனர். எனினும் தனுஷ்-ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மற்றுமொரு
— RS Infotainment (@rsinfotainment) January 13, 2025
தலைசிறந்த படைப்பை தந்த
இயக்குநர் திரு.வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு நன்றி #விடுதலைபாகம்2-ன் வெற்றிகரமான 25 நாள்
ரசிகர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள்,விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.… pic.twitter.com/hD3Gnhh2ap