ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து:
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 18 வருடங்களாக திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி திடீரென கடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்தார்கள்.

அன்று முதல் தற்போது வரை இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த விசாரணையில் இவர்கள் இருவரும் ஆஜர் ஆவார்களா?என்ற ஒரு கேள்வி எழுந்து வந்த நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜரானார்கள்.
சேர்ந்து வாழ விருப்பம் இல்லை:
பிறகு தனுஷ் வருவதற்கு தாமதமாகி 12 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தனுஷ் 11.30 மணி அளவில் நீதிமன்றத்திற்கு வந்தார். இதை அடுத்து 12 மணிக்கு நீதிபதி முன் ஆஜராகினார்கள். இருவரும் பின்னர் நீதிபதி முன் இருவருமே சேர்ந்து வாழ்வதில் விருப்பமே இல்லை என திட்டவட்டமாக கூறினார்கள்.

மேலும் தங்களின் திருமணத்தை செல்லாது என அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதை அடுத்து நீதிபதி வரும் 27ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரியப் போவது உறுதியாகிவிட்டது. எப்படியாவது இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? என தனுஷின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில் இது பேர்ச்சியாக பெரிய இடியாக வந்து விழுந்துள்ளது.