பேன் வேர்ல்டு நடிகர்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் தனுஷ். அதுமட்டுமல்லாது “தி எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்”, “தி கிரே மேன்” போன்ற ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனுஷ் நடித்துள்ளார். இவ்வாறு பேன் இந்தியா மட்டுமல்லாது பேன் வேர்ல்டு நடிகராக தனுஷ் திகழ்ந்து வருகிறார்.

புதிய ஹாலிவுட் திரைப்படம்?

இந்த நிலையில் சமீப நாட்களாகவே தனுஷ் “Street Fighter” என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனியுடன் இணைந்து தனுஷ் நடிக்கப்போவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் தனுஷ் அத்திரைப்படத்தில் நடிக்க இன்னும் ஒப்பந்தமாகவே இல்லையாம். அவர் அத்திரைப்படத்தில் நடிக்க இருப்பது பேச்சு வார்த்தை என்ற அளவிலேயே இருக்கிறதாம். ஆதலால் அத்திரைப்படத்தில் தனுஷ் நடிப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை என தெரியவருகிறது.