இளையராஜா பயோபிக்
தனுஷ், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான அறிவிப்பை குறித்து நாம் அறிந்திருப்போம். இத்திரைப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் இளையராஜா உட்பட தமிழ் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் “இளையராஜா” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. ஆதலால் இத்திரைப்படம் டிராப் ஆகிவிட்டது என்றே பேச்சுக்கள் கிளம்புயுள்ளன.

அடுத்த பயோபிக்!
இந்த நிலையில் தனுஷ் ஒரு புதிய பயோபிக் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என செய்திகள் வருகின்றன. அதாவது பழம்பெரும் காமெடி நடிகரும் பாடகருமான சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோர் தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனது தனித்துவமான உடல்மொழியுடனும் நகைச்சுவை பாணியின் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சந்திரபாபு.