நிரந்தர சூப்பர் ஸ்டார்
ஒரு சாதாரண பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார் என்றால் அவரது உழைப்பும், சினிமா மீதுள்ள ஈடுபாடும்தான் முக்கிய காரணம். பல தடைகளை தாண்டி லட்சியம் ஒன்றே இலக்கு என்று நடைபோட்டவர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு திரைப்படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஏங்காத கதாநாயகிகளே கிடையாது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தும் இதுவரை ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பே அமையாத ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஒரு நடிகை.
தேவயானி
1993 ஆம் ஆண்டு “ஷாட் பொஞ்சோமி” என்ற பெங்காலி திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தேவயானி. அதனை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய தேவயானி தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சரத்குமார், பார்த்திபன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் தேவயானி நடித்துள்ளார். ஆனால் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட அவர் நடித்ததில்லை. ரஜினிகாந்துடன் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதுதான் இப்போதும் கூட தேவயானியுடைய ஆசையாக இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.