ரஜினியின் மாஸ் ஹிட் திரைப்படம்…
ரஜினிகாந்த் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான “அண்ணாமலை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தை கே.பாலச்சந்தர் தயாரித்திருந்தார். தேவாவின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தேவா, இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஒரே நாளில் கம்போஸ் செய்த பாடல்…
“அண்ணாமலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் கே.பாலச்சந்தர் தேவாவிற்கு தொலைப்பேசியில் அவசர அவசரமாக தொடர்புகொண்டு, “ரஜினிக்கும் குஷ்புவுக்கும் ஒரு நாள் மட்டுமே கால்ஷீட் இருக்கிறது. எனக்கு ஒரே நாளில் ஒரு பாடல் வேண்டும்” என கேட்டாராம். அதற்கு தேவா, “ஒரே நாளில் எப்படி பாடல் கம்போஸ் செய்வது” என கூற அதற்கு பாலச்சந்தர், “உன்னால் முடியும் என எனக்கு தெரியும்” என கூறியுள்ளார்.

இதனை உத்வேகமாக எடுத்துக்கொண்ட தேவா ஒரே நாளில் ஒரு பாடலை கம்போஸ் செய்து கொடுத்தாராம். அந்த பாடல்தான் “றெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்” என்ற பாடல்.