STR 48
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் “STR 48” திரைப்படம் அறிவிக்கப்பட்ட செய்தி சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றுதான். இத்திரைப்படம் ஒரு வரலாற்று Fantasy திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இத்திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் பட்ஜெட் தேவைப்படும் எனவும் தகவல்கள் வெளிவந்தன.

வெளியேறிய கமல்ஹாசன்
“STR 48” திரைப்படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டை செலவு செய்ய ராஜ்கமல் நிறுவனம் தயாராக இல்லை எனவும் ஆதலால் கமல்ஹாசன் இத்திரைப்படத்தை தயாரிக்கவில்லை எனவும் பின்னாளில் செய்திகள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து ஒரு துபாய் தயாரிப்பாளர் இத்திரைப்படத்தை தயாரிக்க முன் வந்ததாகவும் அவரிடம் 160 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
கைமாறிய புராஜெக்ட்?

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் சிம்பு நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாம். ஆதலால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, இத்திரைப்படத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். அஜித்திற்கும் இத்திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.